You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

How to Function the Playschools as per Norms in Tamil?

How to Function the Playschools

How to Function the Playschools as per Norms in Tamil?

இந்த பதிவில் நாம் ஒரு மழலையர் பள்ளி விதிகள்படி எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து காண்போம்.

Working Hours in Playschool

Medical facilities in Playschool

Ban on Corporal Punishment in Playschool

Communication with Parents in Playschool

Curriculum and Syllabus in Playschool

Playschool Transportation in Playschool

Inspection and Visit

End

Working Hours in Playschool - மழலையர் பள்ளி செயல்படும் நேரம்

விதிகள் படி, மழலையர் பள்ளி மூன்று நேரத்திற்கு மேலாக செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 -30 மணிக்கு முன்னதாக பள்ளிகள் திறக்கக்கூடாது, அதேபோன்று மதியம் 12 -30 மணிக்கு மேல் செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடம் மாணவர்களுக்கு இடைவெளி அளிக்க வேண்டும்.

பெற்றோர் அறிவுறுத்தலின்பேரில், மாணவர்களுக்கு உணவு வகைகள் வழங்கலாம்.

குறிப்பாக, பள்ளி நிர்வாகம் குழந்தைகள் பள்ளிக்கு வருகை புரியும் நேரம், வெளியேறும் நேரம் குறித்து முறையாக வருகை பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.

Medical facilities in Playschool - மழலையர் பள்ளியில் இருக்க வேண்டிய மருத்துவ வசதிகள்

மழலையர் பள்ளியில் முதலுதவி மருத்துவ பெட்டகம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்

பள்ளியில் மருத்துவ அதிகாரிகள் தொலைபேசி எண்ணுடன் பெயர் பட்டியல் பள்ளி வளாகத்தில் வைத்திருக்க வேண்டும். உடனடி மருத்துவ தேவை என்றால், அவர்களை அழைக்கலாம்.

பள்ளி நிர்வாகம் வல்லுநர்கள் அழைத்து, முதலுதவி சிகிச்சை குறித்து முறையான பயிற்சியை வழங்க வேண்டும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பணியில் தொடர வேண்டும்

சூழற்சி முறையில் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், மருத்துவம் சார்ந்த கருத்தரங்கம் பள்ளிகளில் அடிக்கடி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

Ban on Corporal Punishment in Playschool

மழலையர் பள்ளிகளில் உடல் சார்ந்த தண்டனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தண்டனை குழந்தைகள் மீது பயன்படுத்தினால், சட்ட ரீதியான நடவடிக்கை பள்ளிகள் மீது எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Communication with Parents in Playschool

பள்ளி நிர்வாகம் பெற்றோரின் முழு முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்வை வைத்திருக்க வேண்டும். அவசர சூழ்நிலையில், பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில், விவரங்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Curriculum and Syllabus in Playschool

முன்பருவ கல்வி பாடதிட்ட அடிப்படையில், குழந்தைகளுக்கு கவனிப்பு, உடலளவு மற்றும் மனதளவு மேம்பாடு கல்வி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடல்கள், இசை, பேசுதல், கேட்டல் உள்ளிட்ட பயிற்சிகள், விளையாட்டு செயல்பாடுகள் அடிப்படையில் கல்வி அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Playschool Transportation

மழலையர் பள்ளிகள் சட்ட விதிகள் உட்பட்டு, தங்களது சொந்த வாகனம் அல்லது வாடகை அடிப்படையில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று, வீட்டில் விட வாகனங்களை இயக்கலாம்.

வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்திய பள்ளி பேருந்துகள், வேன்கள், ஆட்டோ உள்ளிட்டவை மாணவர்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு இயக்கலாம். மாணவர்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி பேருந்துகளில் சினிமா பாடல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தக்கூடாது, வாகனம் இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது. பெண் உதவியாளர்கள் வாகனத்தில் இருக்க வேண்டும்.

பேருந்தில் அதிக அளவிலான குழந்தைகள் ஏற்றிச்செல்லக்கூடாது. குழந்தைகள் 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாக குழந்தைகள் பயணம் செய்யக்கூடாது. இது குழந்தைகள் அருகாமையில் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

பள்ளி பேருந்து வாகன பின்புறம் சம்மந்தப்பட்ட கல்வி, காவல்நிலையம், வட்டார போக்குவரத்து, தீயணைப்பு உள்ளிட்ட துறையின் தொலைபேசி எண் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வாகன இயக்கும் ஓட்டுநர், உதவியாளர் குற்ற பின்னணி இல்லாத சான்றிதழ் காவல்நிலையத்தில் பெற்று, பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். இருவரின் அனைத்து விவரங்கள் பள்ளியில் இருக்க வேண்டும்.

https://tneducationinfo.com/what-is-school-bus-safety-norms-and-travelling-in-tamil-article-how-to-send-children-safely-in-school-bus-in-tamil-roll-of-parent-caretaker-and-private-schools-in-sending-children-in-school-bus-ta/

Inspection and Visit

இந்த பள்ளிகளில் ஆய்வு செய்து, விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா அல்லது விதிகள் மீறி இருப்பின் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அதனை சரி செய்ய கால அவகாசம் வழங்கி, விதிகளுடன் செயல்பட வைப்பது ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலர் அவர்களின் கடமையாக உள்ளது. மேலும், பள்ளி விதிமுறைகள் பின்பற்றி செயல்பட தவறினால், பள்ளிகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Conclusion :

இந்த தொடரில் மழலையர் பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து ஒவ்வொரு தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகளை முழுமையாக படித்தால், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்ய முடியும். மேலும், இந்த தொடரில் உள்ள பதிவுகள் குறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும் மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும். நன்றி.