You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

டிஆர்பி உதவி பேராசிரியர் பணி, விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு

General counselling is conducted to college teachers

டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிபணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நிரப்ப உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இணைய வழியாக விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது மற்றும் நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பம் பெறப்படும் எனவும் டிஆர்பி அறிவித்துள்ளது.  

இதற்கிடையில், டிஆர்பி இன்று விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் கோரியதின் அடிப்படையில், உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 16.5.2024 முதல் 19.5.2024 மாலை 5 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

  1. இணையவழி விண்ணப்பத்தை சமர்பித்து தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்
  2. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் கடைசி பக்கத்தில்  உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 
  3. கடைசியாக உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அன்னாரின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். 
  4. விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின், வேறு எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ள இயலாது.
  5. திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள் திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் (பேனல்) உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் (பீல்ட்ஸ்) திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். 
  6. திருத்தம் செய்த பின்னா் பிரிண்ட் ப்ரீவூயு பேஜ் சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் டிக்கெேலரசன் ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். 
  7. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசிலீக்கப்படும். 
  8. விண்ணப்பதாரர்கள் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செயலாது.
  9. இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார். 
  10. விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்தய வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழுக்கட்டணத்தை தொகையினையும் மீண்டும் செலுத்த வேண்டும்.
  11. விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும்போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கனேேவ செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.