கொரோனா தொற்று காரணமாக, 12ம் வகுப்பு ரத்து செய்யப்பட்டது. அதன்பின், மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை கணக்கிட, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கு ஏற்கனவே 10, 11 வகுப்புகளில் பெற்ற பொது தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. 12ம் வகுப்புக்கான செய்முறை தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டது.
அதன்படி மதிப்பெண் எப்படி வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுதேர்வு ( உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுக்கு சராசரி) – 50 சதவீதம்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (written), மதிப்பெண் மட்டும்) – 20 சதவீதம்
12ம் வகுப்பு செய்முறை தேர்வு (அக மதிப்பீடு /practical examination) – 30 சதவீதம்
இதேபோல் கடந்த 11ம் வகுப்பு எழுத்து தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.
மாணவர்கள் மதிப்பெண் ஜூலை 31ம் தேதிக்குள், அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.
கொரோனா முடிந்தவுடன், தனிதேர்வர்களுக்கு தேர்வு தக்க சமயத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |