பள்ளி கல்வி இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மாறுதல் கோரும் விண்ணப்பங்களை ஜூன் 19ம் தேதி (19/6/2025) முதல் 25.6.2025 மாலை 6 மணி வரை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்வது எப்படி
உயர்நிலை/ மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது எமிஸ் இணையதளத்தில் தங்கெளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ஐடி-யை பயன்படுத்தி எமிஸ் மூலம் வெளியிடப்பட்ட மாறுதல் கோரும் படிவத்தில் விவரங்களை பதிவேற்ற வேண்டும். இதில் தவறுகள் (பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், ஆசிரியர் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) ஏற்படும்பட்சத்தில், அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிகளுக்கென உள்ள Login ஐடி-யில் Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்து பின்னர், மீளவும் Individual Login ஐடிக்கு சென்று அனைத்து விவரங்கள் சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பத்திைன சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் பெற்றபின், தலைமை ஆசிரியர் பள்ளி Login ஐடி பயன்படுத்தி, ஆசிரியரின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை முழுமையாக பார்வையிட்டு, சரியாக விவரங்கள் பதிவு செய்யப்பட்டள்ளதா என உறுதி செய்து (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) பின்னர் தலைமை ஆசிரியர் approval செய்ய வேண்டும்.Approval செய்த பின்னர், மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பம் தலைமை ஆசிரியரால் ஒப்புதல் செய்த பின்னர், இரண்டாவதாக முதன்மை கல்வி அலுவலர் தங்கெளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Login ஐடி பயன்படுத்தி ஆசிரியர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என உறுதி செய்த பின்னர் இரண்டாவது Approval செய்ய வேண்டும். மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை கோரி விண்ணப்பிக்கும்போது, அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது பணிபுரியம் பள்ளிக்கு மாறுதல் பெற்ற வகை (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிருவாக மாறுதல், அலகு மாறுதல் பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் விருப்ப மாறுதல் கோரி எமிஸ்-ல் மேற்காண் அறிவுரைப்படியே விண்ணப்பிக்க வேண்டும். இவர்கள் சார்பாக விண்ணப்பிக்கும் மாறுதல் விண்ணப்பங்களை சரிபார்த்து Approval முதன்மை கல்வி அலுவலரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.தலைைம ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறைஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.மாறுதலுக்கு விண்ணப்பித்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரும் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முதன்மைக் கல்வி அலுவலரும் (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு) தங்களுக்குரிய Login IDஐ பயன்படுத்தி சரிபார்த்து ஒப்புதல் (Approval) அளிக்கப்பட வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் மாவட்டக் கல்வி அலுவலரிடமும் / அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள் மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை / மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் (Approval) அளிக்க தங்களுக்கென EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட் User Name and Pasword ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்த்திடல் வேண்டும்.
பொதுவான அறிவுரைகள்மேல்நிலைப் பிரிவில் உயிரியியல் பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும்போது நாம் பயின்ற Main Subject (Major) குறிப்பிடப்பட வேண்டும் மற்றும் எந்த பணியிடத்தில் (Post Details Zoology, Botony, Blology) பணிபுரிகிறார் என்ற விவரத்தினையும் குறிப்பிடப்படவேண்டும்.
கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம் /பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிருவாகத்தின் கீழ் உள்ளநா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். கணவன்-மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30கி.மீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்படவேண்டும்.மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) சார்பான விண்ணப் பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் விண்ணப்பிப்பது சார்ந்து அறிவுரைகள் பின்னர் வழங்கப்படும்.
மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் எதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்சை மேற்கொள்ளப்படும்.கலந்தாய்வு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளி பணிபுரியும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கான பொ மாறுதல் கலந்தாய்வு பதவி வாரியாக கால அட்டவணையினை பின் அறிவிக்கப்படும்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.