Holiday on October 25 | அக்டோபர் 25ம் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு
Holiday on October 25
பொதுமக்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை ஏற்று, தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து சற்று முன் உத்தரவிட்டுள்ளது.
Read Also: குரூப் 2 குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது
குறிப்பாக தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களுக்காக 25ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 25ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 19ம் தேதியை பணி நாளாக பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என்பதால், அலுவலக பணியாளர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டுமா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. காலதாமதமாக இந்த விடுமுறை அறிவித்துள்ளதால், தொலைத்தூர பயணிக்கும் ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் அக்டோபர் 24ம் தேதி மாலையே பேருந்து அல்லது ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்திருப்பார்கள். இதனால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.