திருவாரூர் மாவட்டம் | மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் மழை நீடிப்பதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் நாளை ( 12.2.2022) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கும் நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கும் நிலையில், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.