Higher studies incentive news | ஊக்க ஊதிய உயர்வு ரத்து
Higher studies incentive news
ஆதிதிராவிடர் நல இயக்குனரகம் இயக்குனர் ஆனந்த் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது,
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிாியர்களுள் 10.3.2020க்கு முன்னதாக உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற்று வழங்கப்படாத இடைநிலை, பட்டதாரி, உடற்கல்வி, கணினிபியிற்றுநர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் உயர்கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கிட ஆதிதிராவிடர் நல இயக்குனருக்கு அதிகாரம் வழங்கி ஆணையிடப்பட்டது.
எனவே, ஊக்க ஊதிய வழங்குவதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. எனவே, 10.03.2020க்கு உயர்கல்வி பயின்றதற்கு முன் ஊக்க ஊதிய உயர்வு கோரி பெறப்படும் அனைத்து முன்மொழிவுகளும் ஆதிதிராவிடர் நல இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இயக்குனர் ஆணை பெறப்பட்ட பின்னரே, ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.