மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில் சுகாதார ஆய்வாளர் இரண்டாம் நிலை பணிிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு சற்று முன் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதி வாய்ந்த ஆண் பணிநாடுநர்கள் ஜூலை 31ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1,066 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது. மாத சம்பளம் ரூ 19,500 முதல் 62,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 32 வயதுள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், மாற்றுதிறனாளிகளுக்கு 42 வயது, முன்னாள் ராணுவத்தினருக்கு 50 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அறிவிக்கை பிடிஎப் இணைக்கப்பட்டுள்ளது. To Download pdf notification: click here