கோவை வால்பாறை வட்டாரத்தில், சுமார் 250 பள்ளி மாணவர்களுடன் சோலையார் டேம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு மூலம் சில ஆசிரியர்கள் கடந்த சில மாதங்களுக்கு பள்ளிக்கு வந்துள்ளனர். இந்த நிலையில், முதுகலை பாட ஆசிரியை, மாணவர்கள் விடைத்தாள்களை முறையாக மதிப்பீடு செய்யவில்லை எனக்கூறி, பள்ளி தலைமை ஆசிரியை விளக்கம் கேட்டு மெமோ வழங்கியுள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முதுகலை ஆசிரியர், மருத்துவ விடுப்பிலும் சென்றாக கூறப்படுகிறது. மேலும் பழிவாங்கல் நடவடிக்கை எனக்கூறி, அவர் மெமோவுக்கு விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிருப்தி அடைந்த தலைமை ஆசிரியை மற்றும் இரண்டு ஆசிாியர்கள் சில தினங்களுக்கு முன்பு முதுகலை ஆசிரியை வீட்டிற்கு நேரடியாக சென்று இரண்டாவது மெமோவை வீட்டு கதவில் ஒட்டியுள்ளார். இந்த நடவடிக்ைகக்கு முதுகலை ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த செய்தி ஆசிரியர் வாட்ஸப்குரூப்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.