தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் வெ.பெரியதுரை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கல்வித் துறை 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் 323 குறுவட்ட அளவில் கடந்தாண்டு ஜீலை, ஆகஸ்ட் மாதத்தில் நடத்தியது. விளையாட்டு போட்டிகள் நடத்த சுமார் 3.25 கோடி ரூபாய் இணைச்செயலாளராகிய உடற்கல்வி ஆசிரியர்கள் செலவு செய்து உள்ளார்கள். அதாவது ஒவ்வொரு குறுமைய விளையாட்டு போட்டிகள் நடந்த சுமார் ஒரு லட்சம் ருபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. குறுமைய செயலாராகிய தலைமையாசிரியர் 90% செலவுக்கு பணம் தரவில்லை.
சென்ற நவம்பர் மாதம் தமிழக அரசால், அனைத்து மாவட்டத்திற்கு பணம் வழங்கப்பட்டது.அந்த பணம் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. எனவே, உடற்கல்வி ஆசிரியர்கள் மன வேதனையுடன் உள்ளார்கள். விளையாட்டு போட்டிற்கான செலவு தொகையை விரைவில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் இந்த கல்வியாண்டு குறு மையம் மற்றும் மாவட்ட செஸ் போட்டிகள் நடத்திய செலவுக்கான தொகையை, இதுவரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஓதுக்கீடு செய்யவில்லை. உடனடியாக செஸ் போட்டிக்கு செலவின தொகையை ஓதுக்கீடு செய்ய வேண்டும். குறுமைய செஸ் போட்டிகள் 11.8.23 அன்றும், மாவட்ட செஸ் போட்டிகள் 11.9.23 அன்றும் நடத்தப்பட்டது. போட்டிகள் நடத்தி 7 மாதம் கடந்து விட்டது. ஆனால் விளையாட்டு போட்டிகளுக்கான செலவின தொகை இன்னும் வரவில்லை. குறுமைய விளையாட்டு போட்டிற்கு தலைமையாசிரியர்கள் தான் செலவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது, இவ்வாறு அவர் தொிவித்துள்ளார்.