அரசு தொடக்க பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற தலைமை ஆசிரியரை சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி வட்டாரத்தில் உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியை பணியாற்றி வந்தனர். சொந்த பிரச்னை காரணமாக, தலைமை ஆசிரியர் மதுப்பழக்கத்தாலும், மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், கடந்த 28ம் தேதி பள்ளி ஆசிரியை ஆய்வு கூட்டத்திற்கு சென்றிருந்த நிலையில், தலைமை ஆசிரியா் மாணவர் முன்னிலையில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கிருந்து பயந்து ஒடினர்.மேலும், தலைைம ஆசிரியர், தற்கொலை முயற்சி தோல்வியுற்றதாகவும், அடுத்த வேலை நாளில் மீண்டும் தற்கொலைக்கு செய்வேன் என வாட்ஸப்பில் படத்துடன் கல்வி அலுவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். உடனடியாக விசாரணை செய்த அதிகாரிகள், சில தினங்களுக்கு முன்பு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.