Halloween Day at SNMV College | எஸ்என்எம்வி கல்லூரியில் ஹாலோவீன் கொண்டாட்டம்
Halloween Day at SNMV College
எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ஹாலோவீனைக் கொண்டாடி நினைவு கூர்ந்தது.
ஹாலோவீன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானது. இதை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது.
Read Also: இந்தியாவில் 22 கோடி குழந்தைகள் பாதிப்பு
நிகழ்ச்சிக்கு எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.சுப்பிரமணி தலைமை வகித்தார்.
ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் வி.சபரிராஜாவும் அத்துறைப் பேராசிரியர்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் கற்பனைக் கதாபாத்திரங்களாக மாறுவேடமிட்டு அவற்றை யதார்த்தமாக கொண்டு வந்தனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஹாலோவீன் இல்லத்திற்குச் சென்று ஒருங்கிணைப்பையும் செயல்பாடுகளையும் கண்டுப் பாராட்டினர்.