தமிழ்நாடு மாநில ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் மாநில சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரி ஏஜிபி வளாகத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது மற்றும் 8 வயது சிறுவர், சிறுமியர் பிரிவில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் அனேகன் அந்துவன், அதிரன், ரிதுல் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் பெற்றனர். 8 வயதுக்குட்பட்ட பிரிவில் அஷ்வதா, கிரித்திக்க்ஷா முதல் மற்றும் இரண்டாம் இடத்ைத பெற்றுள்னர். மேலும் 8 வயதுக்குட்பட்ட பிரிவில் மித்ரன் மயங்க் முதல் இடத்தையும், தர்ஷன்பாண்டி முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றனர். 11 தங்கப்பதக்கங்களையும், 7 வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளனர். கோவை ரிங்ஸ் சென்டர் பயிற்சியாளர் மதன்குமாரிடம் பயிற்சி பெற்றனர்.