Gudiyatham Block Educational Officer | குடியாத்தம் வட்டார கல்வி அலுவலர் மீது புகார்
Gudiyatham Block Educational Officer
பள்ளிகளில் ஆய்வு செய்ய அரை சவரன் நகை பணத்தை தருமாறு வட்டார கல்வி அலுவலர் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் சேகர், பொருளாளர் உமா மற்றும் சங்க நிர்வாகிகள் சார்பில் தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, கணியம்பாடி, பேராணம்பட்டு மற்றும் வேலூர் மாநகரம் என 8 வட்டார கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
Read Also: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்
இதில் குடியாத்தம் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர் ஆசிரியர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்ய 10 ஆயிரம், பள்ளியை பார்வையிட 2 ஆயிரம், அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆண்டு ஆய்வுக்கு ஆசிரியர்களிடம் தலா ரூ.15 ஆயிரம், தேர்வு நிலை, சிறப்பு நிலை உத்தரவுகளை வழங்க அரை சவரன் மோதிரம் அல்லது 20 ஆயிரம் வழங்க வேண்டும் என கேட்டு நிர்பந்திக்கிறாா் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் தேதி குடியாத்தம் வட்டார கல்வி அலுவலகத்தில் நடந்த தலைமை ஆசிரியர் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலரை கண்டித்து தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அவரிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
(Source - பத்திரிக்கை செய்தி)