வருமானவரி தாக்கல் செய்ய வட்டார கல்வி அலுவலகத்தில் ரூ.100 வசூலிப்பு
மேலூா் மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மேலும் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட வட்டார கல்வி அலுலகங்களில் வருமானவரி பிடித்தம் டிடிஎஸ் செய்தல் பார்ம் – 16, பார்ட் ஏ அன்ட் பி வருமான வரி தாக்கல் செய்வதற்கு கொட்டாம்பட்டி, வட்டார கல்வி அலுவலர் எங்களுக்கு எவ்வித தொடர்பு இல்லை என்றும் மேலூர் வட்டார கல்வி அலுவலர் பார்ம் – 16 முடித்து தர ஆசிரியர்களிடம் தலா ரூ.100 வரை கேட்பதாகவும், அதற்கு குறைவாக யாரேனும் முடித்து கொடுத்தால் அவர்களை நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட புகார் மனு மேலூர் மாவட்ட கல்வி மாவட்டத்திற்குட்பட்ட வட்டார கல்வி அலுவலர்களுக்்கு அனுப்பப்படுகிறது. மேற்படி மனுவினை பரிசீலனை செய்து வருமான வரி சார்பான பணிகள் நடைபெறுவதை கண்காணித்து வட்டார கல்வி அலுவலர்களே டிடிஎஸ் செய்து பார்ம் -16 பார்ட் ஏ அண்ட் பி யை சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.