நீலகிாி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருேக உள்ள ஒரு பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் அந்த பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த அரசு பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
Read Also: போக்சோ சட்டம் என்றால் என்ன மேலும் குட் டச், பேட் டச் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். அப்ேபாது, மாணவிகள் அந்த ஆசிரியர் தங்களிடம் பல இடங்களில் தொட்டு, பாலியல் தொந்தரவு அளித்தாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் இவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கல்வித்துறை அதிகாரிகளும், குழந்தை நல அலுவலரும் விசாரித்தனர். பின்னர், புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் வியாழன் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.