You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
Government School Infrastructure in Tamil | அரசுப் பள்ளி உள்கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
Government School Infrastructure in Tamil
பள்ளியிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதாக அமைவதுடன் மாணவர்களின் சேர்க்கை மற்றும் வருகையை ஊக்குவிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பள்ளிக் கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதி, கற்போருக்குப் பயனளிக்கும் விதமாகவும், பாதுகாப்பாகவும், கற்பதற்கான சூழலை உருவாக்குவதாகவும் இருத்தல் வேண்டும்.
கட்டடப்பணிகள் யாவும் பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்போடு, அவர்கள் மேற்பார்வையில் தரமான பொருள்களைக் கொண்டு சீரிய முறையில் நடைபெற வேண்டும். அதன்டிப இந்த கீழ் கொடுக்கப்பட்டுள்ள மூன்று விஷயங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழு தெரிவிக்கிறது.
Read Also: Gender Equality in Tamil | அறிவோம் பாலினச் சமத்துவம்
• உள்கட்டமைப்பு வசதிகளின் தேவை.
• உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் அரசின் பங்கு.
• மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள். செயல்பாடு
செயல்பாடுகள் என்னவென்று பார்ப்போம் -
1. நான் பயின்ற பள்ளி.
இன்று :
நாளை:
2. இன்றைய பள்ளி (நம் குழந்தைகள் பயிலும் பள்ளி)
3. என் கனவுப் பள்ளி.
இவற்றை மூன்று அட்டைகளில் எழுதி வைத்தல்.
3. ஒவ்வோர் அட்டையையும் ஒரு குழுவிடம் கொடுத்தல்.
4. கட்டடம், குடிநீர், கழிப்பறை, ஆசிரியர், மாணவர்களின் இருக்கைகள்,
தொழில்நுட்ப வசதி, போக்குவரத்து, பள்ளித் தோட்டம், மதிய உணவு, பள்ளி
மேலாண்மைக் குழு. இக்கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு குழுவும் கலந்துரையாடச் செய்தல்.
5. ஒரு வெள்ளைத்தாளில் அவற்றை ஒவ்வொரு குழுவையும் தொகுத்து எழுதச் செய்தல்.
6. ஒவ்வொரு குழுவும் அவற்றைத் தனித்தனியே வாசிக்கச் செய்தல்.
1. பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளின் தேவை
பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு, வட்டார வளர்ச்சி அலுவலர், இச்செயல்பாட்டின் வாயிலாகப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் வியக்கத்தக்க அளவில் மேம்பட்டு உள்ளதையும், எதிர்காலத்தில் இன்னும் செய்ய வேண்டிய பணிகளையும் அறியலாம்.
பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு பள்ளியின் உள்கட்டமைப்பை மேற்கொள்ளவும் பராமரித்திடவும் உறுதுணை புரிதல் வேண்டும்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 விதிகளின்படி, பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, மாநில அரசு பிற துறைகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளுக்கு முக்கியக் கட்டமைப்பு வசதிகளான புதிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள், வகுப்பறைக் கட்டடங்கள், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள், மாணவிகளுக்கான தனிக்கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தனிக்கழிப்பறைகள் மற்றும் கைப்பிடியுடன் கூடிய சாய்தளங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன? இவ்வசதிகள் அனைத்தும் மாணவரின் கற்றல் அடைவை மேம்படுத்த உதவுகின்றன.
2. உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் அரசின் பங்கு
பள்ளிகளில் சுத்தமான கழிப்பறைகள் அடிப்படைத் தேவையாகும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009ன்படி, அனைத்துப் பள்ளிகளுக்கும் போதுமான அளவில் சுகாதாரமான கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து உயர் தொடக்க நிலைப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கான தனிக்கழிப்பறைகள் யாவும் கைகழுவும் அமைப்புடனும், எரியூட்டுக் கருவி வசதியுடனும் இருக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்மூலம் 2001 முதல் 2018ஆம் ஆண்டுவரையில் 24,580 பொதுக் கழிப்பறைகள், 24,040 மாணவிகளுக்கான தனிக்கழிப்பறைகள் மற்றும் 17,330 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறையின் ஒருங்கிணைந்த – பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2,421 புதிய கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 2019 2020ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தைக் கொண்டு அனைத்துப் பள்ளிகளிலுளிலும் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகளைப் பழுது பார்க்கவும், பராமரிப்பு செய்யவும் 10 சதவீத மானியத் தொகையை ஒதுக்கப்பட வேண்டும்.
3. மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்க வேண்டும்.
உள்ளடங்கிய கல்வியைச் செயல்படுத்துதலில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பிற வசதிகளை வழங்குதல் இன்றியமையாததாகும்.
• மாற்றுத்திறன் மாணவர்களின் வசதிக்காக அனைத்து வகுப்பறைகள் மற்றும் அனைத்து கட்டடங்களில் கண்டிப்பாக கைப்பிடியுடன் கூடிய சாய்தளம் ஏற்படுத்துதல்.
• இவர்களுக்கான தனிக்கழிப்பறைகளில் கைப்பிடியுடன் கூடிய சாய்தளங்கள் அமைத்தல். மேலும், அதன் நுழைவு வாயில் அகலமாக இருத்தல்.
• சக்கர நாற்காலி, காதுகேட்கும் கருவி, கண்கண்ணாடி உள்ளிட்ட பல உதவி உபகரணங்கள் வழங்குதல்.
• பள்ளிக்கு வந்து செல்ல போக்குவரத்து, பயணப்படியும் அவர்களது பாதுகாவலர்களுக்கு பாதுகாவலர் பயணப்படியும் வழங்குதல்.
• சிறப்பு பயிற்றுநர்கள் மூலம் இவர்களுக்கு தேவைப்படும் சிறப்பு பயிற்சிகள் அளித்தல். பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு இக்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் பெறுவதிலும், பயன்படுத்துதலிலும், பராமரித்தலிலும், கண்காணித்தலிலும் பள்ளி மேலாண்மைக் குழு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும்.
பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு/ பணிகள்
• கோவிட் - 19 நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக பள்ளியின் கட்டமைப்பை மாற்றுவதில் உறுதுணையாக இருத்தல்.
• ஆசிரியர், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே அறிவுறுத்தப்பட்ட உடல்/ சமூக இடைவெளி இருக்கும் வகையிலான கட்டமைப்பை ஏற்படுத்துவதில் உதவுதல்.
• பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் விதமாக உபகரணங்கள், கை கழுவ வசதி, முகக்கவசம், முதலுதவி, மருந்துகள் இன்ன பிற பொருட்களை ஈடுபடுத்துதலில் பங்கேற்றல்.
• மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மற்ற மாணவர்களுக்கான சிறப்புத் தேவைகளைச் சந்திப்பதில் அக்கறை காட்டுதல்.
• புலம் பெயர்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பு அல்லது மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் குடும்பத்தைச்
சார்ந்த மாணவர்கள் என அவர்களது தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக பள்ளியின் கட்டமைப்பை உயர்த்த உதவுதல்.
• ஒரே நேரத்தில் அனைவரும் உள்ளே வருவதையும், வெளியே செல்லுவதையும் கட்டுப்படுத்தும் விதமான கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைத்தல்.