You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

அரசு பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை சேலத்தில் அதிா்ச்சி

Government school girls sexually harassed in Salem

அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்த இரு மாணவியரை, மது குடிக்க வைத்து பலாத்காரத்திற்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் அருேக அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில், 14 வயதுடைய 8,9ம் வகுப்பு மாணவியரான இருவர், தங்கி படிக்கின்றனர்.

Read Also: அரசு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு

இவர்கள், வாழப்பாடி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், விடுதி தூய்மை பணியாளர் வாழப்பாடியை சேர்ந்த ராதிகா (40) இரவில் விடுதிக்கு வெளியே அழைத்து, வாழப்பாடியை சேர்ந்த ரகுபதி (37)  என்பவருடன் பழக வைத்து, பாலியல் துன்புறுத்தல் செய்தார் என, கூறிருந்தனர். காவல்துறையினர் நேற்று ராதிகாவை கைது செய்து, ரகுபதியை தேடி வருகின்றனர்.

காவல்துறையினர் கூறும்போது, ராதிகா, ரகுபதி நெருக்கமாக பழகியுள்ளனர். இரவில் ராதிகா, ரகுபதியை விடுதிக்கு அடிக்கடி வரவழைத்து, இருவரும், மது அருந்தி நெருக்கமாக இருந்துள்ளனர். 

அப்போது, இரு மாணவியரையும் அழைத்த ராதிகா, அவர்களுக்கும் மது ஊற்றி கொடுத்துள்ளார். ரகுபதி, அந்த மாணவியரை பலாத்காரம் செய்துள்ளார். சில மாதங்களாக இது தொடர்ந்துள்ளது, என்றனர். 

ேசலம், கொண்டலாம்பட்டியில், 14வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி, பலாத்காரம் செய்த சம்பவத்தில், இரு சிறுவர்கள் உட்பட 4 பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.