ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வரும் 2021ம் வருடம் முதல் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு கூறியிருந்த நிலையில், பெரும்பாலோனோர் அக்டோபர் மாதம் முதலே சனிக்கிழமையன்று பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், டிசம்பர் 31, 2020ம் தேதி வரை இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினம் தவிர பிற சனிக்கிழமைகளில் அலுவலர்கள், ஆசிரியர்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.