You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Government Higher Secondary School Panel List PDF 2023 | பதவி உயர்வு பெற்ற அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல்

Rain Holiday Tomorrow

Government Higher Secondary School Panel List PDF 2023 | பதவி உயர்வு பெற்ற அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல்

Government Higher Secondary School Panel List PDF 2023

பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

01.01.2023-ம் ஆண்டிற்கு அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பதற்கு ஏதுவாக தகுதியுள்ள அரசு / நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அரசு/ நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரது விவரம் பார்வை 1-ல் காண் செயல்முறைகள் வாயிலாகக் கோரப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் பெறப்பட்டது.

சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் பரிந்துரை செய்யப்பட்ட கருத்துருக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2003 -2004 ஆண்டில் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள், பதவி உயர்வு மற்றும் ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 2015-2016

பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள், மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக 01.01.2019 நிலவரப்படி பதவி உயர்வு வழங்கப்பட்டு தற்காலிக உரிமை விடல் செய்தவர்கள் ஆகியோரை சேர்த்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 183 முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் 01 முதல் 833 முடிய உள்ள அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியருக்கான உத்தேச பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேற்படி, உத்தேச பெயர்பட்டியலில் உள்ள சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்தந்த பள்ளி விளம்பர பலகையில் ஒட்டி வைக்குமாறும், இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சார்ந்த ஆசிரியர்களிடமிருந்து சரிபார்த்து திருத்தம், நீக்கம், சேர்க்கை விபரங்களை அனைத்து ஆசிரியர்களின் EMIS ID மற்றும் அவர்கள் பணிபுரியும் பள்ளியின் UDISE NUMBER ஆகியவற்றுடன் 28.07.2023க்குள் W1 பிரிவு w1dsetn@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.