Government Arts College Seerkazhi | கல்லூரி மாணவன் மீது தாக்குதல்
Government Arts College Seerkazhi
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கல்லூரி மாணவிக்கு தவறான முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை தட்டி கேட்ட மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Also: எப்படி கல்லூரி படிப்பை தேர்வு செய்வது
புத்தூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், மாணவிக்கு தவறான முறையில் செல்போனில் மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த அதே கல்லூரியில் பயிலும் மாணவர் திலீப் குமார், பேராசிரியரிடம் தட்டிக் கேட்டதாக சொல்லப்படுகிறது. பேராசிரியர் தூண்டுதலின் பேரில், கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த அருள் அரசன் என்பவர், மாணவன் திலீப்குமாரை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.