Government Arts College Admission Procedure | அரசு கல்லூரியில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
Government Arts College Admission Procedure
தமிழ்நாடு கல்லூாி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் அவர் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2021 – 2022) விண்ணப்பங்களை www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Center – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து AFC ைமயங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசு கல்லூரி விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூ. 48 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பதிவுக் கட்டணம் ரூ. 2 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்சி (SC) / எஸ்டி (ST) பிரிவினருக்கு விண்ணப்பம் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. பதிவு கட்டணம் மட்டும் ரூ. 2 செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சோ்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 6” என்ற பெயரில் 26 . 07. 2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணவர் சோ்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் – 28.07.2021
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் – 10.08.2021
சந்தேகம் அல்லது மேலும் விவரங்கள் அறிய 044 – 28260098 / 28271911.

Comments are closed.