Government Arts College Admission Latest News | அரசு கலை கல்லூாிகளில் மாணவர் சேர்க்கை
Government Arts College Admission Latest News
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு
தமிழகத்தில் உள்ள 164 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-2024ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையில், காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கைக்கு சம்மந்தப்பட்ட கல்லூரிகளில் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் நடத்தப்பட்டது.
Read Also: சிறந்த கல்லூரி தேர்வு செய்வது எப்படி
இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் சில பாடப்பிாிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள ஏதுவாக www.tngasa.in / www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் செப்டம்பர் 14ம் தேதி வரை 3 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.
நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் காணலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.