Government Arts College Admission 2023 | Government Arts College Application Download Pdf | அரசு கலை கல்லூரி அட்மிஷன் எப்போது
Government Arts College Admission 2023
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளங்கலை பட்டபடிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணசர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Center - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Read Also: எப்படி கல்லூரி படிப்பை தேர்வு செய்வது
விண்ணப்ப கட்டண விவரம்
(ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்) - விண்ணப்ப கட்டணம் - ரூ.48, பதிவுக்கட்டணம் - ரூ.2
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை – பதிவு கட்டணம் ரூ.2
விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம்
விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Net Banking மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education – Chennai -15” என்ற பெயரில் 8.5.2023 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோைல அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் – 8.5.2023
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் இறுதி நாள் 19.5.2023
மேலும் விவரங்களுக்கு 1800 425 0110