சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றுபவர் சுப்பிரமணியன்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, வகுப்பு வேளையின் போது, அதே வகுப்பில் இருந்த மாணவரை கண்மூடித்தனமாக பிரம்பால் தாக்கி, காலால் எட்டி உதைத்துள்ளார். அடி தாங்காமல், நிலை குலைந்து போன மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதவிர, இந்த ஆசிரியர் தாக்கி மேலும் இரு மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர் அந்த மாணவனை தாக்கி கொண்டிருக்கும்போது, பள்ளியில் இருந்த மற்றொரு மாணவன், அதனை தனது போனில் படம் பிடித்துள்ளார். மேலும், அந்த மாணவர்கள் இந்த வீடியோ பகிர்ந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில், புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கினார். மாணவரை தாக்கிய விவகாரத்தில் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.