விழுப்புரத்தில் ஆசிரியர் வீட்டில் 17 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் சாலமேட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அருள் லியோகிங், அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், இவரது வீட்டில் பூட்டை உடைத்து 17 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.