தொடக்க பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளி பாதிப்புகள், அவற்றை எப்படி நிவர்த்தி செய்ய ஆசிரியர்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் ஒருவர் காணொளியில் பேசியுள்ளார்.
கொரோனா ஒவ்வொரு தனி மனிதன் வாழ்க்கையிலும் சமூகத்திலும் மாற்றங்கள் உருவாக்கி பல பாதிப்புகள், இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கற்றலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, கற்றல் இடைவெளியை விட்டுச்சென்றுள்ளது. ஆசிரியர்கள் எப்படியாவது மாணவர்கள் கற்றல் இடைவெளியை சரி செய்யு முடியும் என்ற நம்பிக்கையில் 19 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டில் 2வது, 3வது படிக்கும் (3வது படிக்கும் மாணவர்கள் கொரோனா முன்பு சில மாதங்கள் பள்ளிக்கு வந்தனர் ) அரசு பள்ளி மாணவர்களின் கல்வி நிலைமை சற்று யோசித்தால் மிகவும் வேதனைக்குரியது. இந்த வகுப்பு மாணவர்கள் தற்போது வகுப்பறையில் நேரடி வகுப்பில் அமர்ந்து, கல்வியை கற்க தொடங்கி உள்ளனர். இதனால் 19 மாதங்கள் கழித்து பள்ளி மாணவர்களின் அடித்தளமான எழுத்தறிவு, எண்ணிறவில, அடிப்படை, வாழ்வியல் திறன்கள், பண்பியல் திறன்கள் மீட்பது தொடர்பான சவால் ஆகியவை ஆசிரியர்கள் முன்பு உள்ளது. இதற்கு என்ன செய்யலாம், எப்படி தீர்வு காணலாம், அவர்களை எப்படி மீண்டும் ஆர்வத்துடன் கல்வி செயல்பாட்டில் திரும்ப கொண்டு வருவது, எப்படி இந்த கற்றல் இடைவெளியை நிவர்த்தி செய்வது உள்ளிட்டவை குறித்து யோசித்து கொண்டு இருக்கலாம். தற்போது தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆசிரியர்களிடம் கருத்து கேட்டுகிறது. அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் பகிருங்கள், மறக்காமல் உங்கள் கருத்து பதிவு செய்யுங்கள் மாற்றத்திற்கான அடித்தளமாக இருக்கட்டும்.