Girl student ends life | பள்ளி மாணவி தற்கொலை
Girl student ends life
சிவகாசி அருகே தோ்வில் காப்பி அடித்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆலாவூரணி பகுதியை சேர்ந்த ராஜ், தனலட்சுமி தம்பதியின் மகள் தனியார் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளியில் நடந்த தேர்வில் அந்த மாணவி மற்றொரு மாணவியை பார்த்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்த ஆசிரியை மாணவியிடம் பெற்றோரை அழைத்துவரும்படி கூறியுள்ளார். மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் உடனே அழையுங்கள் - தற்கொலை எண்ணத்தை தவிர்த்திடுங்கள் - Call Sneha Foundation - 04424640050 (available 24x7) or iCall, the Tata Institute of Social Sciences' helpline - 02225521111, which is available Monday to Saturday from 8 am to 10 pm.)