GPF - General Provident Fund Interest Rate 2021 Full Details - பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 2021 முழு விவரங்கள்
தமிழக அரசின் நிதித்துறை சற்றுமுன் பொது வருங்கால வைப்பு நிதிக்கான அரசாணை எண் 238 அக்டோபர் 26ம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் 2021 -22 ஆண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவது காலாண்டு, 1-4-2021 முதல் 30-6-2021 வட்டி நிா்ணயம் 7.1 சதவீதம், இரண்டாவது காலாண்டு 1-7-2021 முதல் 30 - 9- 2021 வட்டி நிர்ணயம் 7.1 சதவீதம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இதே 7.1 சதவீதம் வட்டி விகிதம் எவ்வித மாற்றமின்றி, அக்டோபர் 1, 2021 ம் நாளில் இருந்து டிசம்பர் 31, 2021 அன்று வரை அதே வட்டி விகிதம் தொடரும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அரசாணை அனைத்து துறைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழே உள்ள லிங்க கிளிக் செய்து இந்த அரசாணை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.