You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கல்லூரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் - உயர் கல்வித்துறை

General counselling is conducted to college teachers

செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளைப் ஏற்று, நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசினர் பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை (counseling) உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி 25.11.2024 க்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இணையவழியாகப் பெறப்படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது, இவ்வாறு அதில் ெதரிவிக்கப்பட்டுள்ளது.