Gender Equality In Tamil
பால் என்பது உடலியல் சார்ந்த ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இடையேயுள்ள வேறுபாடு ஆகும். ஆனால் பாலினம் என்பது சமுதாயம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம் என வேறுபடுத்திப் பார்ப்பதாகும். சமூகத்தொடர்பு மற்றும் சமூக உறவுகள் சார்ந்து பாலினம் குறித்த கருத்துகள் மாறுபடுகின்றன.
• பால் மற்றும் பாலினம் வேறுபாடு
• பாலினச் சமத்துவம்
• பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பால் மற்றும் பாலினம் வேறுபாடு
பால் நிர்ணயம் நமது சமுதாயத்தில் ஆண் குழந்தைகளை உயர்வாகவும் பெண் குழந்தைகளை தாழ்வாகவும் பார்க்கக்கூடிய மனப்பான்மை இன்றும் இருந்து வருகிறது. ஆனால் ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும், பெண்ணாகப் பிறப்பதற்கும் நம் உடலில் உள்ள இனப்பெருக்க செல்களில் உள்ள குரோமோசோம்கள்தான் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம்.
மனித உடலில் உள்ள இனப்பெருக்க செல்களில் மொத்தம் 46 குரோமோசோம்கள் காணப்படுகின்றன. அதாவது 23 ஜோடி குரோமோசோம்கள்.22 ஜோடி குரோமோசோம்கள் உடல் குரோமோசோம்கள் என்றும் இருபத்து மூன்றாவது ஜோடி குரோமோசோம்கள் பால் குரோமோசோம்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த 23 வது ஜோடி பால் குரோமோசோம்தான் ஒரு குழந்தை ஆணாக அல்லது பெண்ணாகப் பிறப்பதற்கு காரணமாய் அமைகின்றன.
இதனை கீழ் உள்ள படத்தின் கீழ் அறியலாம்.

Different of Gender Equality
மூன்றாம் பால் (திருநங்கைகள், திருநர்)
பால் குரோமோசோம்களின் எண்ணிக்கை அசாதாரண நிலையில் இருந்தால் மூன்றாம் பாலினம் என்கிறோம்.பால் என்பது ஒரு குழந்தை பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுவது ஆகும். பாலினம் (ஆண் மற்றும் பெண்ணின் நடைமுறைச் செயல்பாடுகள்) சமுதாயத்தால் உருவாக்கப்படுவது. எனவே ஆண், பெண் இருவரின் நலனையும் கருத்திற்கொண்டு பாலினம் வரையறை செய்யப்பட வேண்டும்.
பாலின செயல்பாடு
மூன்றாம் பால் (திருநங்கைகள், திருநர்) பாலினச் சமத்துவம்
பாலினச் சமத்துவம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் சமமான உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் இருபாலரையும் சமமாக நடத்துதல் என்பதனைக் குறிக்கிறது. ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் பொருளாதாரப் பங்களித்தல், முடிவெடுத்தல், வளங்களையும், வாய்ப்புகளையும் சமமாக வழங்குதல், சேவைகளைச் சமமாக மதிப்பிடுதல் போன்றவையே பாலினச் சமத்துவத்திற்கு வழிவகுக்கும். அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார அம்சங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குதல் அவசியமானதாகும்.
பாலினச் சமத்துவத்தின் முக்கியத்துவம்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும்போதுதான் ஒரு நாடு முன்னேற முடியும். வளம் மிகுந்த ஒரு சமுதாயத்தை கட்டமைப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியது. அவர்களை முடிவெடுத்தல், பொருளாதாரத்தைக் கையாளுதல், அதிகாரத்தில் பங்குகொள்ள வைத்தல் போன்றவற்றின் மூலம் ஒரு சமுதாயத்தை முன்னேற்ற முடியும்.
ஆண்-பெண் சமத்துவம் கலந்துரையாடல்
பங்கேற்பாளர்களுள் 2 பெண் பங்கேற்பாளர்களை ஆண்கள் செய்யும் வேலைகளைக் கரும்பலகையில் எழுதச்சொல்லவும். அதேபோல் 2 ஆண் பங்கேற்பாளர்களை பெண்கள் செய்யும் வேலைகளைக் கரும்பலகையில் எழுதச் சொல்லவும்.
பிறகு அவற்றைப் பற்றி பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தவும். இன்றையச் சூழலில் பெண்கள் எவ்வாறெல்லாம் தம்முடைய அறிவையும், திறன்களையும் வளர்த்துக்கொண்டுள்ளனர் என்பதனையும், கிராமப்புறப் பெண்களுக்கு கல்வி மற்றும் பொருளாதாரச் தற்சார்பின் அவசியம் பற்றியும் வலியுறுத்தி நிறைவு செய்யவும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள்
இந்திய நாட்டின் அரசியல் சட்டம் 1951 பகுதி இரண்டு பெண்களுக்கான சமத்துவ உரிமையை உறுதி செய்துள்ளது. அதில் சதி தடுப்புச் சட்டம், வரதட்சணை ஒழிப்புச் சட்டம், பாலியல் தொழில் ஒழிப்புச் சட்டம் போன்றவை முக்கியமானவையாகும்.
பெண்கள் அவசர உதவி எண்
பெண்கள் அவசர உதவி எண் - நல்ல மற்றும் கெட்ட தொடுதல் (GOOD TOUCH AND BAD TOUCH) பற்றிய அறிவை முதலில்
ஆண் குழந்தைகளுக்கும் பின்பு பெண் குழந்தைகளுக்கும் ஏற்படுத்துதல். புதிய நபர்களிடம் பழகும் முறையையும், அவர்களின் நடத்தை நோக்கத்தையும் புரிந்துகொள்ளும் திறனை பெண் குழந்தைகளிடம் வளர்த்தல். -
- தவறான முறையில் அணுகும் நபர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற
அறிவையும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனையும் பெண்
குழந்தைகளிடம் வளர்த்தல். தங்களது புகைப்படங்கள், கைபேசி எண்கள் மற்றும் இதர சுயம் சார்ந்த தகவல்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடுதலைத் தவிர்த்தல். -
- பெண் குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி
செய்யும் அம்சங்களைப் பற்றிய அறிவினை வளர்த்தல் மற்றும் பாதுகாப்பு உதவிகளைப்
பெறும் வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். பெண்களைப் பற்றிய உயர்வான எண்ணத்தையும், பாலினச் சமத்துவம் பற்றிய
விழிப்புணர்வையும் பொதுமக்களிடம் ஏற்படுத்துதல். பெண் குழந்தைகளிடம் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வளா்க்கும் வழிமுறைகளை கற்றுத் தருதல் பெண் குழந்தைகளுக்கு சம உரிமைகள் கிடைத்திட வழிவகை செய்தல் -
பாலினச் சமத்துவத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு
பள்ளி மேலாண்மை குழுவினர் கீழ்கண்ட செயல்பாடுகளில் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்தல் அவசியம்
- குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல்
- குழந்தைகளை கற்றல் அடைவை பெறுதல்
- குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்களை பெறுதல்
- குழந்தைகளை சமநோக்குடன் கையாளுதல்
- பள்ளி நிகழ்வுகளில் சமவாய்ப்புகளை பெறுதல் போன்றவை.