School Environment Monthly Activities - பள்ளி சுற்றுச்சூழல் மாத செயல்பாடுகள் முழு விவரம்
பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளியில் செயல்படுத்தப்பட வேண்டிய மாதாந்திர செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பள்ளி சுற்றுச்சூழல் வருட செயல்பாடுகளின் சுருக்கம்
- பயிற்சி - 30 மணிகள்
- வளாகப்பணி - 40 மணிகள்
- சமுதாயப்பணி, வளாகத்திற்கு வெளியே மொத்த நேரம் - 120 மணிகள்
- சுற்றுச்சூழல் முகாம் – 3 நாட்கள்
ஜூன் மாத பயிற்சி (Orientation)
6 மணி நேரம் - தேசிய பசுமைப்படை/ சுற்றுச்சூழல் மன்றம் துவக்கம், மாணவர்கள் தேர்வு, நிதியுதவி, ஆண்டு செயல்பாடு திட்டமிடுதல், அரசு துறைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, படக்காட்சி பள்ளிகளிலும், பொதுவிடங்களிலும், கிராம நிர்வாகத்துடன் இணைந்து சூழல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளுதல் பயிற்சி மற்றும் உலக சுற்றுச்சூழல் தின குறிப்புகள் மாதாந்திர நடவடிக்கை திட்டமிடல்.
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
2 மணி நேரம் - வளாக தூய்மை பராமரிப்பு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுதல்
சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
3 மணி நேரம் - உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு
READ ALSO THIS: சுற்றுச்சூழல் மன்றம் நிதி பயன்பாடு விவரம்
ஜூலை மாத பயிற்சி (Orientation)
5 மணி நேரம் - சுற்றுச்சூழலை அறிதல் இயற்கை வளங்கள் மற்றும் அதன் பயன்பாடு வனமகோத்சவம், உலக மக்கள் தொகை தினம்
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
3 மணி நேரம் - உறுப்பினர்களை கீழ்கண்டவாறு குழுக்களாக அமைத்தல்
- 1.நீர் – - நீலக்குழு
- 2.நிலம் - பச்சைக்குழு
- 3.காற்று - ஆரஞ்சுக்குழு
- 4.ஆற்றல் - மஞ்சள்குழு
- 5.கழிவு மேலாண்மை - பழுப்புக்குழு
- ஒருங்கிணைந்த பணிகளும், செயல்பாடுகளின் துவக்கமும்
- சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
- 6 மணி நேரம் – வனமகோத்சவம் மற்றும் உலக மக்கள் தொகை தினம் பற்றிய விழிப்புணர்வு, பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் மரம் நடுதல்
ஆகஸ்டு மாத பயிற்சி (Orientation)
4 மணி நேரம் –கழிவுகள் உருவாக்கம், கழிவுகளை மேலாண்மை செய்தல்
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
5 மணி நேரம் –வளாகத்தூய்மை, கழிவு மறுசூழற்சி, வளாகத்தில் பசுமை பேணுதல்
சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
6 மணி நேரம் - பொது மக்களிடம் கழிவு உருவாக்கம் மற்றும் மறுசுழற்சி கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ளுதல்
செப்டம்பர் மாத பயிற்சி (Orientation)
2 மணி நேரம் - காற்று மாசுபாடு, ஓசோன் தினம், உலக இயற்கை வள பராமரிப்பு மற்றும் பயன்பாடு.
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
4 மணி நேரம் – காற்று மாசுபாடு தொடர்பான செயல்பாடுகள், பள்ளியளவில் ஓசோன் தினம் கொண்டாடுதல், பள்ளியளவில் ஓவியம், வர்ணம் தீட்டுதல், வினாடி வினா, பேச்சு போட்டி, சூழல் கருத்துக்காட்சி போட்டிகளை நடத்துதல்.
சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
4 மணி நேரம் – காற்று மாசுபாடுள்ள பகுதிக்கு களப்பயணம் மேற்கொள்ளுதல், ஓசோன் தினம் கொண்டாடுதல், கல்வி மாவட்ட அளவில் போட்டிகளில் பங்கேற்றல்
அக்டோபர் மாத பயிற்சி (Orientation)
4 மணி நேரம் - சுற்றுச்சூழலும் இயற்கை வளங்களும், வன உயரின வாரவிழா, மனிதனும் சுற்றுச்சூழலும்
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
6 மணி நேரம் – பள்ளி வளாகத்தில் தாவர, விலங்குகளை அறிதல், வன உயரின வாரம் கொண்டாடுதல்
சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
6 மணி நேரம் – அருகில் உள்ள காடு வன உயிரின உய்விடம், கோயில் காடுகளுக்கு செல்லுதல், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுதல்
நவம்பர் மாத பயிற்சி (Orientation)
4 மணி நேரம் - இயற்கை சமநிலை, சூழல் மீது மக்கள் தொகை தாக்கம், வளங்களை பாதுகாத்தல், இயற்கை வன பாதுகாப்பு நாள்
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
6 மணி நேரம் – உலக தேசிய அளவில் மற்றும் கிராம அளவில் மக்கள் தொகை குறித்து விபரங்களை சேகரித்தல், மக்கள் தொகை அதிகரிப்புக்கான காரணங்கள் அறிதல்.
சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
6 மணி நேரம் – பொதுமக்களிடம் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பு, இயற்கை வள பாதுகாப்பு நாள் கொண்டாடுதல்
டிசம்பர் மாத பயிற்சி (Orientation)
2 மணி நேரம் – சுற்றுச்சூழல் மாசுக்கான காரணங்கள், பாதிப்புகள், தேசிய மாசுக்கட்டுப்பாடு தினம், எரிசக்தி பாதுகாப்பு தினம் மற்றும் உயிரிபன்மய தினம்
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
4 மணி நேரம் – பள்ளியில் ஆற்றல், கணக்கெடுப்பு நடத்துதல், தேசிய மாசுக்கட்டுப்பாடு தினம், எரிசக்தி பாதுகாப்பு தினம் மற்றும் உயிர்ப்பன்மய தினம் கொண்டாடுதல்
சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
4 மணி நேரம் – உள்ளுர் பகுதிகளில் சுற்றுச்சூழலின் மீது ஆற்றிலின்தாக்கம் பற்றி கணக்ெகடுப்பு நடத்துதல், நகரப்பகுதிகளில் மாசுப்பட்ட இடங்களை கண்டறிதல், மூன்று நாள் சுற்றுச்சூழல் முகாமில் பங்கு பெறுதல்
ஜனவரி மாத பயிற்சி (Orientation)
1 மணி நேரம் – சுகமான சூழலுக்கு வழிவகுத்தல், புகையில்லா போகி
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
4 மணி நேரம் –- வளாகத்தூய்மை மற்றும் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றல், புகையில்லா போகி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
6 மணி நேரம் – பொதுமக்களிடம் கழிவு மறுசுழற்சி புகையில்லா போகி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
பிப்ரவரி மாத பயிற்சி (Orientation)
1 மணி நேரம் – உலக ஈர நிலங்கள் பாதுகாப்பு தினம், ராம்சார் கோட்பாடு பற்றிய குறிப்பு
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
4 மணி நேரம் – நீர்வள கணக்ெகடுப்பு நடத்துதல், மழைநீர் சேகரிப்பு, மழை அளவு கணக்கெடுப்பு தகவல் சேகரித்தல்,
சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
7 மணி நேரம் – நீர் ஆதாரங்களில் நீரின் தரம் அறிதல் வளாகம் சுற்றியுள்ள பகுதிநீரின் தன்மை பற்றிய அளவு
மார்ச் மாத பயிற்சி (Orientation)
1 மணி நேரம் - உலக வனதினம், உலக நீர்தினம், உலக புவிதினம்
பள்ளி வளாக பணிகள் (Campus Activities)
2 மணி நேரம் - செயல்பாடுகளை மதிப்பீடு செய்து அறிக்கை தயாரித்தல்,
சமூகம் சார்ந்த பணிகள் (Community Activities)
2 மணி நேரம் – உலக வன தினம், உலக நீர் தினம், உலக புவி தினம் கொண்டாடுதல்
சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் யாா்?
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
- இயக்குனர், சுற்றுச்சூழல் துறை
- கூடுதல் இயக்குனர், சுற்றுச்சூழல் துறை
தேசிய பசுமை படை நிர்வாகிகள் யார்?
- 1.மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
- 2.தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
- 3.இயக்குனர், சுற்றுச்சூழல் துறை
- 4.கூடுதல் இயக்குனர் சுற்றுச்சூழல் துறை
- 5.மாநில ஒருங்கிணைப்பாளர் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
- 6. CEO – DEO –- H.M- Teacher –Co - Ordinators
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி என்ன?
நான் இயற்கைக்கும் அதன் வளத்திற்கும் எவ்வித, தீங்கும் விளைவிக்காமல் பாதுகாப்பேன் என்றும், என்னையோ அல்லது மற்றவர்களையோ சூழ்நிலைக்கெதிரான, யாதொரு செயல்களிலும் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்றும், மாசுபடல், இயற்கைவளம் குன்றல், உயரினப் பன்மய இழப்பு அடிப்படை வசதிகள் போன்ற சூழ்நிலை பிரச்னைகளை இயற்கையுடன் ஒன்றித்தீர்வு காண்பேன் என்றும் நாட்டின் வளம் குன்றா வளர்ச்சிக்கு, இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் பசுமையான சுற்றுச்சுழலைப் பற்றி என்னுடனிருப்போர்கள், அறியும்படி செய்வேன் என்றும், இதன்மூலம் உளமாற உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு பள்ளி மாணவர்ளை உறுதிமொழி ஏற்க செய்ய வேண்டும்.