Free Education Ramakrishna Mission Chennai | இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம்
Free Education Ramakrishna Mission Chennai
சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் 6 ஆம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லச் செயலர் சுவாமி சத்யஞானாந்தர் வெளியிட்ட அறிக்கை
கடந்த 118 ஆண்டுகளாக கல்வி சேவை அளித்து வரும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷினில் நிகழாண்டு 2023-2024 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
பெற்றோரை (தாய் அல்லது தந்தை) இழந்து வறுமையில் உள்ள ஆண் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடத்துடன் இலவச கல்வி வழங்கப்படுகிறது. 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 6ஆம் வகுப்பு தமிழ் வழியில் ராமகிருஷ்ண மிஷன் உறைவிட பள்ளியில் படிக்கலாம்.
Read Also: குழந்தைகள் அடிப்படை உரிமைகள்
10ம் வகுப்பு தேறியவர்கள் (குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள்) முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். (மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் மற்றும் கணினி பாடப்பிரிவு) 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு (லேட்டரல் என்ட்ரி பாடப்பிரிவு) டிப்ளமோ படிப்பில் சேரலாம்.
மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை
http://www.rkmshome.org.in/admissions என்ற இணையவழி முகவரியில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.