தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி பகுதியில் ஒரு அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர், ஆசிரியர் கூறிய வீட்டு பாடம் முடிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.‘
இதையடுத்து ஆசிரியர்கள் அவர்களை நேற்று பள்ளியில் தாக்கியதாக கூறப்படுகிறது, மனமுடைந்த நிலையில், மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், கல்வி அதிகாரி கண்ணன் இன்று பள்ளியில் விசாரணை நடத்தினார். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பியூலா, மேரி மற்றும் தலைைம ஆசிரியர் சத்யா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை கண்டித்து, மாணவனின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.