You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பறக்கும் படையிடம் சிக்கிய தலைமை ஆசிரியர்

Coimbatore nehru stadium admission

சிவகங்கை மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு 83 தேர்வு மையங்களில் 7234 மாணவர்களும், 8829 மாணவிகளும், 174 தனி தேர்வர்களும் எழுதுகின்றனர். 10 பறக்கும் படையினர் 83 முதன்மை கண்காணிப்பாளர்கள் 83 துறை அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறனர். 

நேற்று திருப்புவனம் அருகே மணலூர் தனியார் (அழகுமலர் மெட்ரிகுலேஷன்) பள்ளியில் 11ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்து கொண்டிருந்தபோது தேர்வு மைய கண்காணிப்பாளர் ஜெயக்குமார் (தலைமை ஆசிரியர், திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளி) தேர்வு எழுதியவர்களை கண்காணிக்காமல் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். 

பறக்கும் படை துறை கண்காணிப்பாளர் தனலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் ஆய்விற்கு வந்த நிலையில், அவரிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். அவரை தேர்வு பணியில் இருந்து விடுவித்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிகிறது.