Also Read: ஆசிரியர் பயிற்றுநர்கள் போராட்டம்
இதற்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நிறுத்தப்பட்ட பயணப்படியை மறுபடியும் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர, தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் பொது முடக்க காலத்திலும் சொந்த செலவில் பயணம் மேற்கொண்டு பணி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் மாநில திட்ட இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றியதாக தெரிவிக்கும் ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களுக்கான நிலையான பயணப்படி நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில் அதனை உறுதி செய்து வழங்கிட வேண்டும் . வரும் மாதங்களில் வழக்கம் போல் ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றிய காலத்தில் பயணம் மேற்கொண்டு இருப்பின், அதனை உறுதி செய்து பயணப்படியை விதிகளின்படி வழங்கிட வேண்டும். இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.