அரசு கலைக்கல்லூரி முதலாம் ஆண்டு திறப்பு எப்போது?
தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சில கல்லூரிகளில் கலந்தாய்வு ஆகஸ்டு 18ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் எப்போது முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில்
கல்லூரி கல்வி இயக்குனர் (பொ) ஈஸ்வரமூர்த்தி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு இன்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு சேர்க்கை முடிந்தமைக்கு ஏற்ப, தொடர்புடைய முதல்வர்களே வகுப்புகளை தொடங்குவது குறித்து முடிவெடுத்து விரைவில் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவர்கள் தாங்கள் சேர்ந்த கல்லூரியில் எப்போது கல்லூாி திறக்கப்படும் என்று நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவே அறிந்துெகாள்ளலாம் அல்லது அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நாளிதழ் வாயிலாகவும் அறிவிக்கலாம்.