First year Class will starts on October 4 – கல்லூரி மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் 4ம் தேதி துவக்கம்
தமிழக அரசு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவித்தது. அதன்பின், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தன. இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் அனைத்து மண்டல கல்லூரி கல்வி இயக்குனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
அனைத்து கல்லூரிகளிலும் இளநிலை இரண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அரசின் நிலையான வழிகாட்டு பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2021-2022 ஆம் கல்வியாண்டின் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்கள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், அனைத்து மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும், கல்லூரி வளாகங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
