திருச்சி மாவட்டம், முசிறி தாத்தையங்கார் வட்டார கல்வி அலுவலகத்தில் கடந்த 5ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில், மாணவர்கள் சீருடை, புத்தகம், ஆசிரியர் பணிப்பதிவேடு உள்ளிட்ட தீயில் கருகின என செய்திகள் வெளிவந்தன. அதேசமயம், பணிப்பதிவேடு பத்திரமாக உள்ளதாக வட்டார கல்வி அலுவலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வட்டார கல்வி அலுவலர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் ஆஜரானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை ராஜேந்திரன் என்பவர், தாத்தையங்கார் வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு வட்டார கல்வி அலுவலரின், பள்ளி பார்வை, பள்ளி ஆய்வு, அலுவலக அசைவு பதிவேடு, பயணப்படி மற்றும் இதர தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். மாறாக, அந்த வட்டார கல்வி அலுவலர் தகவல் அளிக்கவில்ைல. இதை எதிர்த்து மனுதாரர் ராஜேந்திரன் மாநில தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளார். அப்போது வட்டார கல்வி அலுவலர் கடந்த மாதம் 29ம் தேதி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த ஒரு வாரத்தில் வட்டார கல்வி அலுவலக்த்தில் தீப்பிடித்தது பகீர் சந்தேகத்தை கிளப்பியுள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் வலுவான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் ஆசிரியர்கள் கூறும்ேபாது, ஒரு வட்டார கல்வி அலுவலர், ஒரு கல்வியாண்டில் ஒரு பள்ளியை மூன்று முறை பார்வையிட வேண்டும், ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், வட்டார கல்வி அலுவலர் பின்பற்றவில்லை. தரமான கல்வியை எதிர்நோக்கும் மாநில கல்வித்துறை, அதிகாரிகள் மெத்தனப்போக்கால், எப்படி தரமான ஆய்வு பள்ளிகளில் செய்திட முடியும் என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ெதாடக்க கல்வி இயக்குனர் ச கண்ணப்பன் இதுபோன்ற விவகாரங்களில் நடவடிக்ைக எடுக்காமல் அமைதி காப்பது அவருக்கு அவரே வைக்கும் வேட்டு என ஆசிரியா்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.