தொழில்துறையினர் மற்றும் கல்வி நிறுவனங்களின் வீடியோ கான்ஃபரன்சிங் போன்ற இணையவழி செயல்பாடுகளை எளிமையாக்க திட்டம் - நிதியமைச்சர்.
ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழிக் கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது. இ- பாடசாலைத் திட்டத்தின் கீழ் மேலும் 200 பாடப்புத்தகங்கள் ஆன்லைனில் சேர்க்கப்பட்டுள்ளன - நிதியமைச்சர். ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி கற்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையவழி சேவை இல்லாதவர்களுக்கு டிடிஎச் மூலம் கல்வி கற்க ஏற்பாடு - நிதியமைச்சர். இணையதளம் மூலம் கல்வி கற்பதற்காக ''ஐ காட்'' திட்டம் புதிதாக அறிமுகம் - நிதியமைச்சர். 1-ம் வகுப்பு முதல் 12- வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல். ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம்- நிதியமைச்சர். மே 30ம் தேதி முதல் ஆன்லைனில் பாடம் நடத்த 100 முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி. 2025க்குள் அனைத்து குழந்தைகளும், 5ம் வகுப்பு படிப்பதை உறுதி செய்யும் திட்டம் டிசம்பரில் அறிமுகம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். செவித்திறன் மற்றும் பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மின்- பாடங்கள் (இ-புக்) உருவாக்கப்படும். ஆன்லைன் படிப்புகளை தொடங்க 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி. டிடிஎச் நிறுவனங்கள் தினமும் 4 மணிநேரம் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கேட்டுக் கொள்ளப்படுவர் - நிதியமைச்சர். ஊரடங்கு காலத்தில் பல மாணவர்களுக்கு மன ரீதியாக ஆதரவு தேவைப்படுகிறது தேவைப்படுகிறது. இதற்காக 'மனுதர்பம்' என்ற நிகழ்ச்சி பிரதம மந்திரியின் இ-வித்யா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் - நிதியமைச்சர்