தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலைக்கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதற்கிடையில், கல்லூரி கல்வி இயக்குனரகம் தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள் மாணவர்கள் சேர மீண்டும் வாய்ப்பு அளிக்த்துள்ளது. அதன்படி, அரசு கலைக்கல்லூரிகள் கலந்தாய்வு மூலம் வரும் நவம்பர் 16ம் தேதி (திங்கட்கிழமை) மாணவர் சேர்கை நடத்த உள்ளது. இதில் இதுவரை கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகள் நேரடியாக கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப்படிப்பில் சேரலாம். இதுவே கடைசி வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. எந்தெந்த படிப்பில் காலியிடம் உள்ள விவரங்களை கல்லூரியில் அறிந்துக்கொள்ள முடியும். கல்லூரிக்கு செல்பவர்கள் மறக்காமல் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், உள்ளிட்டவை எடுத்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.