Erode Palakarai Primary School | பாலக்கரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
Erode Palakarai Primary School
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பள்ளி கழிவறைகளை மாணவ, மாணவிகளை கொண்டு சுத்தப்படுத்திய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Read Also: வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சஸ்பெண்ட்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாலக்கரையில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவ, மாணவிகளே சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அந்த பணிகளை தினமும் 2 மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளியின் தலைமையாசிரியை கீதா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவ, மாணவிகள் பெற்றோர் மூலம் கல்வித்துைற அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதைதொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பாலக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, மாணவ- மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியை கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.