You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Entrance Exam Details in Tamil | பொது நுழைவு தேர்வு | அகில இந்திய பொது நுழைவு தோ்வு

Entrance Exam Details in Tamil

Entrance Exam Details in Tamil | பொது நுழைவு தேர்வு | அகில இந்திய பொது நுழைவு தோ்வு

Entrance Exam Details in Tamil

நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இருப்பினும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஏராளமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்காக அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் பொது நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்பது என்பது கடந்த பல ஆண்டுகளாக பெரும் சவால் நிறைந்ததாகவே இருந்துவந்தது. தமிழகம் மட்டுமின்றி மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலக்கூடிய மாணவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் இந்த சிக்கல் இருந்து வந்தது. அகில இந்திய பொது நுழைவு தேர்வு நடைபெறும் காலகட்டத்தில் தமிழக மாணவர்கள் மாநில பொது தேர்வுகள் தயாராக வேண்டியிருந்தது.

ஆனால், அண்மை காலமாக தேசிய அளவிலான தேர்வுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் நுழைவதற்கு சமமான வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக தேர்வு நடைபெறும் காலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவதற்காகவே என்டிஏ (National Testing Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை அமைக்கப்பட்டுள்ளது.

Read Also: ஸ்டெம் கல்வி என்றால் என்ன

Read Also: Entrance Exam Tips in Tamil

இந்த அமைப்பு ஆண்டுத்தோறும் யுஜிசி நெட், நீட் (யுஜி), ஜேஇஇ மெயின், சிஎஸ்ஐஆர், சிமேட், ஜிபாட், இக்னோ பி.எச்டி., ஐசிஏஆர்., ஐஐடிஎப், சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு, கியூட் உள்ளிட்ட பல்வேறு நுைழவுத் தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வுகள் சிபிஎஸ்இ பாட திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

மாணவர்களுக்காக சில முக்கியமான அகில இந்திய நுழைவு தே்ாவு விவரங்கள் அளிக்கப்படுகின்றன.

CUET UG in Tamil - மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவு தேர்வு

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை பட்டப்படிப்பில் (யுஜி) சேருவதற்கு இனி கட்டாய பொதுத் நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். இந்த தேர்வு ஹிந்தி, மராத்தி, குஜராத், தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை என்டிஏ நடத்துகிறது. 3 மணி நேரம் நடக்கக்கூடிய இந்த தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. மொத்தம் 27 பாடங்கள் இருக்கும் நிலையில், அதில் 6 பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து பதிலளிக்க வேண்டும். அத்துடன் பொது அறிவு கேள்விகளும் இருக்கும். இந்த தேர்வை 14 பல்கலைக்கழங்களின் மாணவர் சோ்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், 2022-2023ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

JEE Main Details in Tamil –- ேஜஇஇ மெயின்

நாடு முழுவதும் உள்ள என்ஐடிக்கள், ஐஐஐடிக்கள், ஜிஎப்டிஐ-க்கள் (அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள்) போன்றவற்றில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்காக ஆண்டுத்தோறும் இருமுறை, ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு தாள்களை கொண்ட இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படும். தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது. மாணவர்கள் இரண்டு முறையும் தேர்வை எழுத வேண்டிய அவசியமில்லை. அப்படியே எழுதினாலும், எதில் கூடுதல் மதிப்பெண்கள் எடுக்கின்றாரோ அதை பயன்படுத்தி கொள்ளலாம்.

JEE Advanced in Tamil - ேஜஇஇ அட்வான்ஸ்டு

நாடு முழுவதும் உள்ள 23 அகில இந்திய தொழில்நுட்பகழங்களில் (ஐஐடி) உள்ள சுமார் 16 ஆயிரம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. ஐஐடிக்களில் பொறியியல், அறிவியல், கட்டடக்கலை போன்றவற்றில் இளநிலை பட்டம் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டம், ஒரே நேரத்தில் இளநிலை, முதுநிலை பட்டங்களை பெறும் படிப்புகள் நடத்தப்படுகின்றன. பி.டெக், பி.எஸ்.பி, பி.ஆர்க், பிடெக்-எம்.டெக் ஒருங்கிணைந்த எம்.டெக்., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. போன்ற 4 ஆண்டு, 5 ஆண்டு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதைத் தவிர, இதே கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் மற்ற படிப்புகளுக்கு ஜேஇஇ தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இதுதவிர பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், திருவனந்தபுரத்தில் உள்ள ஐஐஎஸ்டி நிறுவனம், ராஜூவ்காந்தி பெட்ரோலியம் தொழில்நுட்ப நிறுவனம், விசாகப்பட்டினத்தில் உள்ள பெட்ரோலியம், ஆற்றல் நிறுவனம் போன்றவற்றில் நடத்தப்படும் சில படிப்புகளுக்கு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஐஐடி மும்பையால் இணையவழியில் நடத்தப்படும் ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வு இரண்டு தாள்கள் கொண்டதாகும். ஜேஇஇ (மெயின்) தேர்வை எழுதி முதல் 2.50 லட்சம் தரவரிசைக்குள் இடம்பெற்றவர்கள் மட்டுமே ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

NEET UG –- நீட் நுழைவு தேர்வு

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான (எம்பிபிஎஸ், பிஎடிஎஸ்) மாணவர் சேர்க்கைக்கு நீட் யுஜி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமையால் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ கல்வி நிறுவனங்களில் உள்ள அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு, மத்திய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 17 வயதை நிறைவு செய்த யாரும் நீட் தேர்வை எழுதலாம். உச்ச வயது வரம்பு இல்லை. 200 நிமிடங்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையாக கொண்ட இந்த தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. தவறான பதிலுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படும்.

CMET in Tamil - சிமேட்

மத்திய உயர் கல்வி நிறுவனங்கள், அகில இந்திய தொழில்நுட்ப பல்வி கழகத்தின் (ஏஐசிடிஇ) கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடத்தப்படும் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் பொது நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை இணைய வழியில் நடத்துகிறது. ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது உச்ச வரம்பு இல்லை.

NDA in Tamil - என்டிஏ

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி போன்றவற்றில் சேர யுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் 2 முறை (ஏப்ரல், செப்டம்பர்) என்டிஏ தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த தோ்வை எழுதலாம். 900 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு, ஆளுமைதிறன் தேர்வு போன்றவை கொண்டது இந்த தேர்வு. ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

CLAT - கிளாட்

நாடு முழுவதும் உள்ள 23 தேசிய சட்ட பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட 90 சட்டப்படிப்பு நிறுவனங்களில் எல்எல்பி., எல்எல்எம் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்பு (இளநிலை, முதுநிலை) மாணவர் சேர்க்கைக்காக கிளாட் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் சுமார் 2,800 இடங்களை நிரப்புவதற்காக தேசிய சட்டப்பல்கலைக்கழக கூட்டமைப்பின் சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

பிளஸ்2வில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள், 20 வயது நிரம்பாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஓராண்டு எல்எல்எம் படிப்பை மேற்கொள்ள எல்எல்பி அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு நாடு முழுவதும் சுமார் 120 தேர்வு மையங்களில் நடத்தப்படும்.

ICAR AIEEA UG in Tamil –

நாடு முழுவதும் உள்ள 74 வேளாண்மை பல்கலைக்கழங்களில் இளநிலை மாணவர் சேர்க்கைக்காக (அகில இந்திய ஒதுக்கீடு) அகில இந்திய ேவளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் நடத்தப்படும் ேதர்வு. பல்வேறு மாநிலங்களில் உள்ள 63 மாநில வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை, மீன்வள பல்கலைக்கழகங்கள், ஐசிஏஆர் நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 15 சதவீத இடங்களுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. கணினி அடிப்படையிலான இந்த தே்ாவில் கொள்குறி வகையிலான வினாக்கள் இடம்பெறும். பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.

பொதுதிறன் தேர்வு

பட்டய கணக்காளராக (சிஏ) விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வுக்கு பிறகு சிஏசிபிடி எனப்படும் பொதுத்திறன் ேதர்வு எழுதலாம். இந்த தேர்வை எழுத தடையில்லை. இருப்பினும் குறைந்தபட்சம் பிளஸ் 2 கல்வித்தகுதி தேவைப்படும். கணக்குப்பதவியியல், பொருளாதாரம், வணிக சட்டம், பொது அறிவு தொடர்பான 200 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும். தலா 2 மணி நேரம் கொண்ட இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும். கொள்குறி வகை வினாக்கள் இடம் பெற்றிருக்கும். தவறான வினாக்களுக்கு ைமனஸ் மதிப்பெண் உள்ளது. இதைத் தவிர, கம்பெனி செக்ரட்டரி படிப்புக்காக தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல், பேஷன் டெக்னாலஜி நிறுவனம் (நிப்ட்) உள்ளிட்ட பல்வேறு பிரபல அரசு, தனியார் கல்வி நிறுவனங்களும் தங்கள் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவிலான பொதுத் தேர்வுகளை நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றன. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குறிப்பாக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் கூடுதல் சிரத்தையுடன் படித்தால், அகில இந்திய நுழைவுத் தோ்வுகளின் மூலமாக தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பை பெற முடியும்.

கட்டுரை சோர்ஸ் / தினமணி

கட்டுரையாளர் / தங்கராஜ்