Ennum Ezhuthum Training Latest News | எண்ணும் எழுத்தும் பயிற்சி
Ennum Ezhuthum Training Latest News
தொடக்க கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
2023-2024ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 மற்றும் ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்க எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2023-2024ஆம் கல்வியாண்டு 4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான முதல் பருவத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து 5 மற்றும் 5ஆம் வகுப்பு கற்பிற்கும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி 18.5.2023 முதல் 20.5.2023 வரை மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி 25.5.2023 முதல் 27.5.2023 வரை நடைபெறவுள்ளது.
Read Also: பழைய ஓய்வூதிய திட்டம் முதல்வர் மவுனம் கலைக்க வேண்டும்
இதன் தொடர்ச்சியாக, 4 மற்றும் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சி 1.6.2023 முதல் 3.6.2023 வரை 3 நாள்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ளும் வகையில் அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து பணிவிடுப்பு செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.