Ennum Ezhuthum Training | பயிற்சியா ? பரீட்சையா - குழப்பத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள்
Ennum Ezhuthum Training
எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்பதா அல்லது மாணவர்களுக்கான பரீட்சை நடத்துவதா என்ற குழப்பம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
சமீபத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான இறுதி நாள் 28ம் தேதி என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்து பயிற்சி வரும் 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எப்போது நடத்தப்படுவது குறித்து தொடக்க கல்வித்துறையில் இருந்து எந்த அறிவிப்பம் வெளியாகவில்லை. இதனால், தொடக்க கல்வித்துறையில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்று ஆசிரியர்கள் புலம்பிதள்ளுகின்றனர்.
Read Also: ஆசிரியர் கலந்தாய்வு 2023
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, இந்த கல்வி ஆண்டு முடிய 11 நாட்களே உள்ளது. இதில் மூன்று நாட்கள் பயிற்சிகள் நடக்க உள்ளது. அன்றைய தினத்தில், குழந்தைகளை யார் பள்ளியில் கவனித்துகொள்வார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதுதவிர, பள்ளிகளில் ஏப்ரல் 17ம் தேதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டு, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் செய்ய வேண்டியுள்ளது.
அதே சமயம் தேர்வு தேதி தெரிவிக்கப்படாததால், இறுதியில் ஆசிரியர்களிள் பனிச்சுமையை அதிகப்படுத்தும். மேலும் தேர்வு ஆன்லைனில் நடப்பதால், அதற்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டியதாக இருக்கும். ஏனென்றால், ஏற்கனவே இன்டர்நெட் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இது ஏற்கனவே ஆசிரியா்களுக்கு தலைவலியை கொடுத்துவருகிறது. தற்போதைக்கு இந்த பயிற்சியை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்பதே பெரும்பாலான ஆசிரியர்கள் கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.