Ennum Ezhuthum Online Exam Protest | எண்ணும் எழுத்தும் ஆன்லைன் தேர்வுக்கு எதிராக போராட்டம்
Ennum Ezhuthum Online Exam protest
தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் நடைபெறும் எண்ணும் எழுத்தும் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சிக்கு சொந்தமான ஹாமீம்புரம் தொடக்க பள்ளியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி கல்வித்துறையின் உத்தரவின்படி, தொடக்க பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் முதல் பருவத்துக்கான தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளது என ஆசிாியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், இத்தேர்வு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளியை முற்றுகையிட்டு, பெற்றோர்கள் வகுப்பறையில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நூற்றக்கணக்கான மாணவர்கள் அப்பள்ளியில் படித்து வருவதால், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த ஆசிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். போதிய இணையதள வசதியின்மை, உபகரணங்கள் வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சர்வர் பிரச்னை காரணமாகவும் தேர்வுள் அவ்வப்போது கல்வித்துறையால் ஒத்திவைக்கப்படுவது ஆசிரியர்கள் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் கற்றல் திறன் சோதனையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் தேர்வால் மாணவர்களுக்கு கண்கள் பாதிப்பு, போதிய நேரமின்னை உள்ளிட்ட பிரச்னை ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆன்லைன் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அவர்கள் சமதானம் நடத்தியது கல்வித்துறையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.