English Teacher Suspend | ஆங்கில ஆசிரியை பணியிடை நீக்கம்
English Teacher Suspend
வேலூர் மாவட்டம் இலவம்பாடி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் வீட்டுப்பாடம் சரியாக எழுதவில்லை எனக் கூறி மாணவிகளை தாக்கிய ஆங்கில ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தீபலட்சுமி என்ற ஆசிரியர் முறையாக வீட்டுப்பாடம் எழுதாததால் ஏழாம் வகுப்பு மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், பிரம்பால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மூன்று மாணவிகள் காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் தீபலட்சுமி பணியிடை நீக்கம் செய்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார்.