You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஆன்லைன் வேலை வாய்ப்பு பதிவு செய்வது எப்படி?

Employment registration online in Tamil

தற்போது வேலைவாய்ப்பக பதிவுகள் அனைத்தும் இணையதளம் மூலமாக உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது. மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், இவ்விணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும், கட்டுப்பாட்டுகளுக்கும் உட்பட்டு தங்கள் வசிக்கும் மாவட்டத்திற்குற்பட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் புதிய பதிவினை மேற்கொள்ளலாம். 

தாங்கள் வசிக்கும் மாவட்டத்தை தேர்வு செய்து personal details, contact details, qualification details, Technical/Diploma/ Certificate course. Skill details என்ற பிரிவுகளில் ஒவ்வொன்றாக சான்றிதழ்களின்படி சரியான விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். 

பட்டதாரி கல்வித்தகுதி வரை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை சரியாக தேர்வு செய்து பதிவு செய்து கொள்ளலாம். இதே போல் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் 16 இலக்கம் கொண்ட பதிவெண்னை USER ID ஆகவும் பிறந்த தேதியினை PASSWORD ஆகவும் வைத்து பதிவிற்குள் சென்று கூடுதல் கல்வித்தகுதி பதிவு செய்தல், புதுப்பித்தல் செய்தல் அனைத்தும் இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். 

மேலும் சிறப்பு பிரிவினர்களுக்கான பதிவு இவ்வலுவலகத்தில் மேற்கொள்ளப்படும். அவற்றில் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ் வழியில் பயின்றோர, மாற்றுத்திறனாளி ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் செய்தோர், முன்னானள் இராணுவ பணியாளர் ஆகியோருக்கு இவ்வலுவலகத்தில் பதிவு செய்து தரப்படும். பதிவு செய்த பின்னர் பரிந்துரைக்கும் பணியினை மட்டுமே வேலை வாய்ப்பகம் மேற்கொள்ளவதாகத்தான் இன்றும் பலர் நினைத்து கொண்டுள்ளனர். வேலை வாய்ப்பகத்தின் பல்வேறு பணிகளில் ஒன்று மட்டுமே பரிந்துரைப்பதாகும்.

How to new employment registration in video : Click Here

Professional Qualification  

முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம் போன்ற (Professional Qualification) கல்வித்தகுதி பெற்றவர்கள் தங்களது கல்வித்தகுதியினை சென்னை மற்றும் மதுரையில் இயங்கி வரும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கோவை, உதகை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிப்பவர்கள் மதுரை தொழில் மற்றும் செயல்கிளை வேலை வாய்ப்பு அலுவலகத்திலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், கடலூர், சேலம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, பெரம்பலூர், மாவட்டங்களை சார்ந்தவர்கள் சென்னை தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பை அலுவலகத்தை தேர்வு செய்து இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

இதே போல் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் 16 இலக்கம் கொண்ட பதிவெண்னை USER ID ஆகவும் பிறந்த தேதியினை PASSWORD ஆகவும் வைத்து பதிவிற்குள் சென்று கூடுதல் கல்வித்தகுதி பதிவு செய்தல், புதுப்பித்தல் செய்தல் அனைத்தும் இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம்.