EMIS Latest News | கல்வித்துறை மெத்தனப்போக்கு கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்
EMIS Latest News
கலை ஆசிரியர் நலச்சங்கம் மாநிலத்தலைவர் எஸ்ஏ ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஓவியம், தையல், இசை, காலம் காலமாக பள்ளி பாடவேளைகளில் உள்ள போது 1 முதல் 9 ம் வகுப்பு வரை இலவச ஓவிய நோட்டு பள்ளி திறந்த முதல் நாளே வழங்கபட்டது. தற்போது10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓவிய இலவச நோட்டு வழங்குவதை நிறுத்தி விட்டது. கடும் கண்டனத்தை தொிவித்து கொள்கிறேன். ஓவிய பாடத்திட்டத்திற்கு இதுவரை கல்வித்துறை பாடத்திட்டம் வழங்காததால், பல ஆசிரியர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் மாணவர்களுக்கு ஓவியத்தை கற்பித்து வருகின்றனர்.
மேலும் பல பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் பணி இடங்கள் காலியாகவே உள்ளது. இதில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் பணியிடம் வேறு தனியாக உள்ளது. ஓவிய பாடத்திட்டம் பற்றி கேட்டால் எமிஸ் இணைய தளத்தில் இருந்து ஓவியம் நீக்கி விட்டனர். கடும் கண்டனத்திற்குரியது. பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்பதால் தான் ஓவியம் ஓரங்கட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, உடனடியாக எம்மிஸ் இணையதளத்தில் ஓவியம் ஒரு பாடமாக சேர்க்கப்பட வேண்டும். இதனை கண்டித்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர் அழைத்துள்ள ஆசிரியர் சங்க கூட்டத்திற்கு கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் புறக்கணித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.