Education Scholarship Scam in Tamil Nadu
அரசு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி பெற்றோரிகளிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 படித்து வருத் மாணவர்களின் பெற்றோருக்கு வந்த கைப்பேசி அழைப்பில் பேசிய நபர், தான் ஒரு அலுவலர் எனவு், அவர்களது குழந்தைகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளதாகவும், பணம் அனுப்பியதற்கான க்யூஆர் குறியீடு அவர்களது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவிடுவதால், அதை தொட்டால் அவர்களுக்கு பணம் வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் தமிழக அரசு சின்னத்தையும் வைத்திருந்தால், இதை உண்மை என நம்பிய பெற்றோர் க்யூஆர் குறியீட்டை தொட்ட அடுத்த நொடியிலேயே அவர்களது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் பறிபோனது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த 7 பேர் கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தனர்.சைபர் க்ரைம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, இந்த மோசடியில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் சௌரிபாளையம் டேவிட், லாரன்ஸ்ராஜ், ஜமேஷ், எட்வின் சகாயராஜ், மாணிக்கம் ஆகிய 5 பேரை நாமக்கலில் கைது செய்து சனிக்கிழமை அழைத்து வந்தனர்.